• Jan 19 2025

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. தமிழக வெற்றி கழகத்தின் 2வது அறிக்கை..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 தளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.


இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விஜய், தான் நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ’என் நெஞ்சில் குடியிருக்கும்   ரசிகர்களே’ என்றுதான் தொடங்குவார். ஆனால் இன்றைய அறிக்கையில் அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என்று ஒரு அரசியல் கட்சி தலைவராக தன்னுடைய தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் விஜய் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்பிற்குரிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள், ஊக்கம் அளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement