• Jan 19 2025

17 வருடங்களில் விஜய்யால் பல பட வாய்ப்புகள் இழந்தேன்: விக்ராந்த் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 17 வருடங்களில் எனக்கு வந்த பல திரைப்பட வாய்ப்புகள் விஜய்யால் தான் பறிபோனது என நடிகர் விக்ரம் அதிர்ச்சி பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விக்ராந்த் கடந்த 2005ஆம் ஆண்டு ’கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ உள்பட பல படங்களில் நடித்தாலும்  அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் ’லால் சலாம்’ திரைப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கிய நடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ராந்த் பேட்டி அளித்துள்ளார்.

அதில் ‘கடந்த 17 வருடங்களில் தனக்கு விஜய்யால் தான் பல பட வாய்ப்புகள் பறிபோனது என்று தெரிவித்தார். தனக்கு வாய்ப்பளிக்க வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் விஜய்யை நம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வையுங்கள், ஒரு பாடலுக்கு நடனம் ஆட வையுங்கள் அல்லது நமது படத்தின் பெயரை ட்விட்டரில் பதிவு செய்ய வையுங்கள், உங்கள் அண்ணன் தானே, உங்களுக்காக செய்வார்’ என்று வருவார்கள்.

ஆனால் நான் அப்படியான வாய்ப்புகளை தவிர்த்து விடுவேன், எனக்காக என் அண்ணன் விஜய் எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார், என்னுடைய திரைப்படத்திற்காக அவர் விளம்பரம் செய்வதை நான் விரும்பவில்லை, அதனால் தான் நான் பல வாய்ப்புகளை இழந்தேன் என்று கூறினார்.  

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்விக்கு அவர் பதில் அளித்த போது கண்டிப்பாக விஜய் அரசியலிலும் வெற்றி பெற்று ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என்று கூறினார்.

Advertisement

Advertisement