• Mar 27 2023

இவர் இவ்வளவு ஸ்டிக்கான இயக்குநரா..? ஆனாலும் ஸ்டிக் கொஞ்சம் ஓவர் தான்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் மிகவும் தைரியமாக சாதியின் ஏற்றத்தாழ்வு குறித்து பேசும் இயக்குநர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வருபவர். தனது முதல் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்” என்ற படம் இந்திய சினிமாவையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 


இதனை தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கிய “கர்ணன்” திரைப்படத்தை குறித்து நாம் தனியாக கூறத் தேவையில்லை. அந்த அளவுக்கு மிகப் பெரிய விவாதங்களை கிளப்பிவிட்ட திரைப்படமாக அமைந்தது. மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்” என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.


 இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகர் ஜி.மாரிமுத்து, மாரி செல்வராஜ்ஜின் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.


அவர் கூறுகையில் “மாரி செல்வராஜ் ஒரு பெரிய ராட்சச இயக்குநர் ஆவார். தன் மனதுக்குள் இருக்கும் சினிமா காட்சியாக வரும் வரை விடவே மாட்டார். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவர் நினைத்ததை காட்சிப்படுத்தியே தீருவார். அந்த விதத்தில் மாரி செல்வராஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என அப்பேட்டியில் கூறியிருந்தார் மாரிமுத்து.


மேலும் பேசிய அவர் “படத்தின் ஹீரோ கதிர், முள் காட்டிற்குள் ஓடி வருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் வெறும் காலோடு கதிரை ஓடச்சொன்னார். அந்த இடத்தில் பல பீங்கான் கண்ணாடிகள் உடைந்து கிடக்கும். அதை எல்லாம் மிதித்துத்தான் கதிர் ஓடினார். அவரது காலில் ரத்தம் வந்துவிடும். ஆனால் அந்த காட்சி சரியாக வராது, மீண்டும் கதிரை ஓடச்சொல்வார்.


ஒரு காட்சியில் கதிரை நிஜ வாழைத் தண்டால் அடிக்கச் சொன்னார். அவர் உடம்பில் பல இடங்களில் வீங்கிவிட்டது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வந்தார். அதே போல் யாரையாவது கன்னத்தில் அறைவது போன்ற காட்சி இருந்தால் நிஜமாகவே அறையச்சொல்வார். பாசாங்கு காட்டினால் கோபம் வந்துவிடும்.


 ‘பளார்ன்னு அடி, கன்னத்துல அடிச்சா அவன் என்ன செத்துறவா போறான்?’ என்று திட்டுவார். அவருக்கு அனைத்துமே நிஜமாக இருக்க வேண்டும்” என்று அப்பேட்டியில் கூறியிருந்தார். என்ன இருந்தாலும் இவ்வளவு ஸ்டிக் இருக்க கூடாது.


Advertisement

Advertisement

Advertisement