• Mar 23 2023

நீண்ட நாள் கனவை நனவாக்கிய பிக்பாஸ் விக்ரமன்- வைரலாகும் வீடியோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த ஐந்து சீசன்களை விட, சீசன் 6 நிகழ்ச்சி பிரச்சனைகளுக்கு சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பானது.

அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த சீசன்களில் அதிக பட்சமாக 16 போட்டியாளர்கள் மற்றும் சில வைல்ட்காடு போட்டியாளர்கள் கலந்து கொள்வதை பார்த்திருப்போம். 


ஆனால் இந்த சீசனில் வைல்ட் கார்டு  போட்டியாளர் யாரும் இல்லாமல், ஆரம்பத்திலேயே மொத்தம் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது.பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்திலேயே வெளியேற்றப்படுவார்கள் என யூகிக்கப்பட்ட சிலர் வெற்றிகரமாக 106  நாட்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடி வந்தனர்.

மேலும் இதில் டைட்டில் வின்னராக அசீமும் இரண்டாவது இடத்தை விக்ரமனும் பெற்றுக் கொண்டனர். விக்ரமன் டைட்டில் வின்னர் ஆகாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.இருப்பினும் விக்ரமனைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்ரமன் அறம் வெல்லும் என்னும் புதிய பௌன்டேசன் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளார். இது குறித்த அப்டேட்டை தான் வெளியிட்டுள்ளார். அதன்படி அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பிக்க வேணடும் என்பது இவருடைய நீண்ட நாள் கனவு. அதனை தற்பொழுது செயற்படுத்தவுள்ளாராம்.

மேலும் அதற்கான லோகோ மக்களிடம் இருந்து தான் பெற ஆசைப்படுகின்றாராம்.அத்தோடு தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பி மக்களிடம் லோகோவினைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement