• Jan 19 2025

2 வருஷமே வெயிட் பண்ண போறன்; 2 நிமிஷம் வெயிட் பண்ண மாட்டனா? வெட்கத்தில் சிவந்த ரவீனா முகம்! க்யூட் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டுள்ளது. தற்போது தீபாவளி என்பதால் அனைவரும் உற்சாகமாக இருப்பதை நாம் காணலாம்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மணி சந்திரா, ரவீனாவிடம் தனக்கு தல தீபாவளி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், எனக்கு பசிக்குது சீக்கிரம் வா என்று ரவீனாவிடம் மணி கூற அதற்கு 'இரண்டு நிமிடம் வெயிட் பண்ணு' என்று ரவீனா கூறுகிறார். அப்போது 'ரெண்டு வருஷம் வெயிட் பண்ண போறேன், ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண மாட்டேனா?' என்று மணிச்சந்திரா கூற ரவீனா முகம் சிவந்தார். இருவரும் மாறி மாறி செல்லமாக சண்டை போட்டுக் கொண்டனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றது.


இதனை பார்க்கும்போது க்யூட் ஆக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த சீசன் முடிவதற்குள் மணி - ரவீனா சிறந்த காதலர்களாக வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை. பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்னரே இருவரும் நெருக்கமாக இருந்தனர் என்பதும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்த புகைப்படங்களை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement