• Dec 04 2023

திடீரென இணையத்தில் லீக்கான லியோ படத்தின் HD Print- அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. குறிப்பாக ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த லியோ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. 

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், இயக்குநர் கவுதம் மேனன், மிஷ்கின் என படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 


இந்த சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு அதிகளவில் கவனம் பெற்றது. குறிப்பாக சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் என்று விஜய் பேசி அப்ளாஸ் வாங்கினார்.

மேலும் மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் செய்த வசூல் சாதனையையும் லியோ தொடர்ந்து முறியடித்து வருகிறது.இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார். 


ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்று நடந்துள்ளது. லியோ படத்தின் HD Print இணையத்தில் லீக்காகியுள்ளது. அதிகாரபூர்வமாக Netflix தளத்தில் வெளியாவதாக இருந்த லியோ படத்தின் HD Print திடீரென லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement