• Jan 19 2025

காவியா,ப்ரியாவுக்கு வந்த புதிய பிரச்சினை- ஐஸ்வர்யாவின் அம்மா போட்ட புதிய திட்டம்-Eeramaana Rojaave Season 2 Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது, புதிதாக நான்கு வீடு கட்டித் தரச் சொல்லி, ஒருவர் பார்த்திபனின் அப்பாவிடம் பணம் கொண்டு வந்து கொடுக்கின்றார்.அதனால் அவர் பணத்தை வாங்கி வீட்டிற்கு இரண்டு மருமகள்கள் வந்த நேரம் அதான் நிறைய பணம் வந்திருக்கு என்கின்றார்.

இதைக் கேட்ட,ஐஸ்வர்யாவின் அம்மா கோபப்படுகின்றார். மறுநாள் பார்த்திபனின் அம்மா பணம் வைத்த பையை எடுத்து வருகின்றார்.அப்போது அதற்குள் பணம் இல்லை என்று சொல்ல, உடனே ஐஸ்வர்யாவின் அம்மா காவியா மற்றும் ப்ரியா இருக்கும் ரூமுக்குள் சென்று அவர்களது பெட்டியை எடுத்துப் பார்க்கின்றார்.

அதற்குள் பணம் இருப்பதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement