• Sep 20 2024

நடிகை குஷ்புவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா-இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்வை ஆரம்பித்து 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு பிரபல இயக்குநரான சுந்தர் சி யை திருமணம் முடித்திருக்கும் இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். அத்தோடு “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

குஷ்பு எப்போதும் ஆக்டீவாக சமூக வலைதளத்தில் இருக்கும் ஒரு பிரபலம். டுவிட்டரில் சமூக விஷயங்களை பற்றி பேசும் குஷ்பு இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

எனினும் தற்போது அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார் குஷ்பு.

இதோ பாருங்கள்,

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement