• Sep 19 2024

பிக்பாஸ் சீசன் 3 மதுமிதா அம்மா ஆகி விட்டாரா?-அழகான சீமந்த வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகளைக் கவர்ந்த காமெடி நடிகைகளாக கோவை சரளா, ஆர்த்தி போன்ற சிலரே காணப்படுகின்றனர். இவர்கள் வரிசையில் உதயநிதி நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறியப்பட்டவர் தான் மதுமிதா.

இப்படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்படுகின்றார். மேலும் இவருக்கு லொள்ளு சபா, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நிகழ்ச்சிகளால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென தற்கொலை முயற்சி செய்தார். கையை கத்தியால் அறுத்துக்கொண்ட பரபரப்பை ஏற்படுத்திய மதுமிதா அதன் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவர் 2019ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதில் கமிட்டாகி வந்த மதுமிதா 3 ஆண்டுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் சீமந்தம் கூட அண்மையில் நடந்துள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement