• May 05 2024

மைக்கேல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்-சிக்ஸ் பேக் உடலோடு மிரட்டலாக நிற்கும் சந்தீப் கிஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது இயக்குநர் ராமின் உதவியாளரான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மைக்கேல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதியை வைத்து ஏற்கனவே புரியாத புதிர் என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இதய ராணியும் இஸ்பேட் ராஜாவும் என்ற படத்தை இயக்கினார்.

அந்த படம் ஓரளவு கவனம் பெற்றதால் இப்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷன் சிக்ஸ் பேக் உடலோடு இருக்கும் மிரட்டலான போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement