• Sep 20 2024

10 மில்லியனை கடந்த "கோல்டன் ஸ்பேரோ" பாடல்! "NEEK" இயக்குனரை கொண்டாடும் ஜிவி... வைரலாகும் புகைப்படம்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தற்போது இயக்குனராகவும் களமிறங்கி அதில் வெற்றி காண்டவர் தான் தனுஷ். இவர் மூன்றாவது முறையாக இயக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இயக்கி வருகின்றார் தனுஷ்.


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் இருந்து "கோல்டன் ஸ்பேரோ" பாடல் வெளியாகி  வைரலாகி உள்ளது.


இந்த பாடலில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடனமாடியுள்ளார். ஒரு பெப்பியான காதல் பாடலாக ஜிவி பிரகாஷ் இந்த பாடலை இசை அமைத்துள்ளார். இதில் ஹைலைட்டாக காணப்படுவது தனுஷின் வாய்ஸ். இந்தப் பாடலில் வித்தியாசமான வாய்ஸில் முயற்சி செய்திருக்கிறார். இந்த பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றது. இதுவரைக்கும் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜி பிரகாஷ் நன்றி எனது இயக்குனருக்கு என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். 





Advertisement

Advertisement