• Apr 15 2026

"S46" படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்.. வைரலான பதிவு.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் புதிய கூட்டணிகளில் ஒன்றாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இணையும் படம் அமைந்துள்ளது. தற்போது ‘S46’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தில் சூர்யாக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்துவரும் மமிதா பைஜூ, இந்தப் படத்தின் மூலம் மேலும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்ட உள்ளார் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

‘S46’ திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது Xதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


அவரது பதிவில்,“S46 படத்துடன் மிக விரைவில் வருகிறோம், விரைவில் அப்டேட்.! ”என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement