70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய திரைப்படங்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் இந்த விருது விழாவில், தமிழ் பிரிவில் கடந்த 2024ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிய அமரன் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டின் விருது விழாவில் அமரன் படம் மொத்தம் 8 முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த மியூசிக் ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி பாடகி மற்றும் சிறந்த பின்னணி பாடகர் போன்ற பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
ஒரே படத்திற்கு இவ்வளவு பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருப்பது, அந்த படத்தின் முழுமையான கலைச் சாதனையை வெளிப்படுத்துகிறது.
2024ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த அமரன், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருது விழாவைத் தொடர்ந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், “அமரன் படம் 8 விருதுகளை வென்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஒரே படத்திற்கு 8 விருதுகள் கிடைத்திருப்பது தமிழ் சினிமாவுக்கே ஒரு பெருமை என திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Beyond cinema beyond competition
Amaran @filmfare
Best Film #Amaran
Best Actor @Siva_Kartikeyan
Best Director @Rajkumar_KP
Best Actress @Sai_Pallavi92
Best Music Album @gvprakash
Best Cinematographer @Dop_Sai
Best Male singer (Hey Minnale ) @HaricharanMusic
Best Female singer… pic.twitter.com/DANbUkTFVG
Listen News!