தமிழ் சினிமாவில் ‘துணிவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜோடிகளில் ஒன்று அஜித் குமார் – மஞ்சு வாரியர். துணிவு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த இவர்களின் நட்பு, திரைக்குப் பின்னாலும் தொடர்கிறது என்பதற்கு சமீபத்திய சந்திப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

சினிமாவைத் தாண்டி கார் ரேசிங்கில் பெரும் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் அஜித் குமார், சமீபத்தில் தனது ரேசிங் நடவடிக்கைகளில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் அஜித்தின் ரேசிங் இடத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு, மஞ்சு வாரியர் தனது அனுபவத்தை உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், “AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, தனது ஆர்வத்தை தொடர்ந்து பின்தொடரும் ஒருவராக அஜித்தை பாராட்டியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!