தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்தவராக ஜி.வி. பிரகாஷ் காணப்படுகின்றார். இவர் பாடகர் மற்றும் பின்னணி இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களில் வெற்றிகரமாக செயற்பட்டவர். இத்தகைய ஜி.வி. பிரகாஷ் இசைத்துறையின் பிரபலப் பின்னணிப் பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் பல வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். எனினும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை நிரூபிக்கும் வகையில் தற்பொழுது தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி, நீண்டநாள் காதலுக்குப் பிறகு 2013ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற அழகான மகளும் இருக்கின்றாள். இருவரும் இசை மற்றும் கலை என்ற ஒரே துறையில் இருப்பதால் இவர்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காணப்பட்டனர்.
சில நாட்களாகவே இருவரும் தனித்தனியாகவே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் தனது நடிப்பு மற்றும் இசை வேலைகளில் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டிருப்பதோடு, தனிப்பட்ட வாழ்வில் சௌகரியமின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
தற்பொழுது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மனுவில், “நாங்கள் கடந்த 12 வருடமாக திருமண உறவில் இருந்தோம். தற்போது பரஸ்பர ஒப்புதலோடு மனவருத்தமின்றி பிரிந்து வாழ விரும்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
Listen News!