தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து இப்பொழுது தன்னம்பிக்கை கொண்ட இயக்குநராக மாறிய நடிகை சோனாவின் பயோபிக் படவிவகாரம் பற்றிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.
சோனா தனது வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பயோபிக் படம் இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் அவர் முக்கிய பாத்திரத்தில் நடித்து மட்டுமல்லாமல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சோனாவின் குற்றச்சாட்டின் படி, தனது படம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் உள்ள ஹார்ட் டிஸ்க்கை கொடுக்க நிறுவனம் மறுத்து விட்டதாக கூறுகின்றார். அத்துடன் தன்னுடைய முழு முயற்சி மற்றும் கனவு என்பன அந்த ஹார்ட் டிஸ்க்கில் சிக்கிக் கொண்டு விட்டது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் முன் நடிகை சோனா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தின் போது அவர் தனியாகவே ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோனாவின் எதிர்ப்பிற்கு தமிழ்த் திரைப்பட உலகம் மௌனமாக இருப்பது சோனாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தனது படத்தை உலகம் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரே ஒரு ஹார்ட் டிஸ்க்கினால் இழந்து விடக்கூடாது என்பதற்காகவே தனியாகப் போராடுவதாகவும் கூறியுள்ளார்.
Listen News!