• Mar 26 2025

நெட்பிளிக்ஸிடமிருந்து 22 மில்லியன் ஏமாற்றிய வழக்கில் கைதான ஹாலிவூட் இயக்குநர்..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ஹாலிவூட்டில் வியக்கத்தக்க மோசடி ஒன்று தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் "ஒயிட் ஹார்ஸ்" என்ற வெப்சீரிஸை உருவாக்க இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச் என்பவரிடம் 22 மில்லியன் டாலர் கொடுத்திருந்தது. எனினும் அவர் ஒரு எபிசோட் கூட தயாரிக்காமல் அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


கார்ல் எரிக் ரின்ச் என்பவர் ஹாலிவூட் உலகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். அந்தவகையில் 2018ல் ஆரம்பமான இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 11 மில்லியன் வழங்கியது. சிறிது காலம் கழித்து 11 மில்லியன் பணத்தை இயக்குநரிடம் கொடுத்திருந்தது.

இவ்வாறு 22 மில்லியன் பணம் கொடுத்தும் இயக்குநர் படத்தினை எடுக்காததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இத்தகவல் தற்பொழுது அனைத்து திரைபிரபலங்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement