பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 85 நாட்களை கடந்துள்ளது. இதில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே வாங்கி யார் முதலாவதாக ஃபினாலேவுக்கு செல்வார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை 85 நாட்களாகியும் டைட்டில் வின்னர் இவர் தான் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் மிக்ஸர் பார்ட்டிகள் தான் அதிகமாக இருக்கின்றார்கள் என்று ரசிகர்கள் வெறுப்பை காட்டினார்.
மேலும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வரும் போட்டியாளர்கள் என்று யாருமே இல்லை. டைட்டில் வின்னரை கூட யூகிக்க முடியவில்லை. மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் உருவாகும். ஆனால் இந்த சீசனில் கமருதீன் பார்வதியின் காதலை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பார்வையாளர்கள் கதறுகின்றனர்.

இந்த நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் முதலாவதாக சுபிக்ஷா ஒன்பது புள்ளிகளுடன் தேர்வாகியுள்ளார்.
அவரை தொடர்ந்து அரோரா 8 புள்ளிகள், கமருதீன் 7 புள்ளிகளும், திவ்யா 6 புள்ளிகளும் பெற்றுள்ளார்.
மேலும் பார்வதிக்கு 5 புள்ளிகள், சபரி 4 புள்ளிகள், வினோத் 3 புள்ளிகள், விக்ரம் 2 புள்ளிகளும் இறுதியாக சாண்ட்ரா ஒரு புள்ளியும் பெற்றுள்ளார்.
Listen News!