• Jun 24 2024

பழனியின் கல்யாண விஷயத்தை போட்டுடைத்த பாட்டி.. பாக்கியாவிடம் ருத்ரதாண்டவம் ஆடிய கோபி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான கதைக்களம் தொடர்ந்து இரண்டு மணி நேரங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

அதில் இனியாவின் பர்த்டேக்கு கோபி கிப்ட் வாங்கி வரும்போது வழியில் பழனியின் அக்காவும் அம்மாவும் நிற்கின்றார்கள்.

கோபி உள்ளே போகும்போது வேணும் என்றே தட்டில் பழங்கள் வைத்துக் கொண்டு வரவில்லையா? என்பது போல கேட்க, இதைக் கேட்ட கோபி தட்டு, பூ, பழமா என்று முழிக்கிறார்.


இதன் போது பழனியின் அக்கா பாக்யாவை பேசி முடிக்கலாம் என்று வந்திருக்கோம் என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.


இதைத்தொடர்ந்து உள்ளே இனியாவுக்கு கேக் வெட்டும்போது ராமமூர்த்தி பழனியையும் கூப்பிட்டு கேக் வெட்டுகிறார். இதை அவதானிக்கிறார் கோபி.

இறுதியாக பாக்கியாவிடம் உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் முடிச்சு வைக்க போறாங்களாம். நீ எல்லாம் ஒரு அம்மாவா என கோபமாக கத்துகிறார் கோபி. இதனால் வாயை  மூடுங்கள் என பாக்கியா சொல்லுகிறார்.  எனவே இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement