• Jan 18 2025

நல்லா சகுனி வேலை பாக்குறீங்க கோபி.. உண்மையை சொல்லி ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்கியா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபி தனது நண்பரை பார்த்து பாக்கியா ரெஸ்டாரன்ட் தொடக்கப் போற விஷயத்தையும், தன்னை அங்கு மேனேஜராக இருக்குமாறு சொன்ன விஷயத்தையும் சொல்லி கோபப்படுகிறார்.

அந்த நேரத்தில் கோபியின் நண்பரும் தனது கசினுக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகவும், ஸ்கூல் பங்க்ஷன் ஒன்றுக்கு மினிஸ்டரை அழைக்க வேண்டும் எனவும் சொல்ல, கோபி உடனே ஸ்கூல் பங்ஷனுக்கு அமைச்சர் வந்துவிட்டால் பாக்கியாவை அவமானப்படுத்தலாம் என பிளான் போட்டு ஒரு மாதிரியாக மினிஸ்டரின் பிஏ நம்பரை வாங்கி எடுக்கிறார்.

இதைத் தொடர்ந்து கோபியும் அவரது நண்பரும் மினிஸ்டரின் பிஏ வை பார்த்து அட்ஜஸ்ட்மென்ட் எதுவும் பண்ணலாம் ஸ்கூல் பங்ஷனுக்கு மினிஸ்டரை வரவைக்க எதுவும் செய்யுங்க என சொல்கிறார்கள். அதுபோலவே அவரும் பணத்திற்காக மினிஸ்டர் கட்டாயம் வருவா என்று ஒப்புக்கொள்கிறார்.


இதை அடுத்து வீட்டில் யார் யாருக்கு பத்திரிக்கை கொடுப்பது என லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன்போது ராமமூர்த்தி ஒருவருக்கு போன் செய்து பாக்கியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது பற்றி சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி அமைச்சர் வருவார்களா? என கேட்டு மறைமுகமாக ஆப்பு வைத்திருப்பதை  சொல்லுகிறார். ஆனால் அதை யாரும் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள்.

மறுபக்கம் கிச்சனில் பாக்கியா ராதிகாவை நிகழ்ச்சிக்கு அழைக்க, என் புருஷன அவமானப்படுத்திட்டு என்ன எப்படி இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடுறீங்க என ராதிகா கேட்கிறார். 

அதற்கு பாக்கியா,  எல்லாத்துக்கும் ஒரு பொறுமை இருக்கு. நான் உங்க புருஷன அவமானப்படுத்திட்டேன்னு சொல்றீங்களே இந்த வீட்ல என்னை எத்தனை தடவை அவமானப்படுத்தி பேசி இருக்கார். பிரிஞ்சதுக்கு பிறகும் நான் எதுக்கும் லாயக் இல்லை என்று அவமானப்படுத்திட்டே தான் இருக்கார். ஞானியாய் இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் பொறுமை இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் நான் இப்ப அவரோட மனைவியா உங்களை கூப்பிடல, எனக்கு நீங்க ஆரம்பத்தில் உதவி செஞ்சீங்க அந்த நன்றி கடனுக்காகத்தான் நான் உங்களை கூப்பிடுறேன். வாரதும் வராததும் உங்க விருப்பம் என சொல்லி அங்கிருந்து செல்கிறார்.


Advertisement

Advertisement