• Jan 18 2025

பெரிய பொசிஷனுக்கு வந்தும் சூரி இன்னும் மாறல..! விஜய் சேதுபதி பகிர் பேட்டி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் சூரி. குறித்த திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு அதில் தனது திறமையான நடிப்பை  வெளிக்காட்டி பிரபலமானார்.

1999 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கிய சூரி, தற்போது 60க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த சூரிக்கு, அண்மையில் வெளியான விடுதலை திரைப்படம் ஒரு சிறந்த திருப்பு முனையாக இருந்தது. இதை அடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.


அதேபோல தனது திறமையின் மூலம் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் தான் விஜய் சேதுபதி. இவரும் ஆரம்பத்தில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது நாயகனாக, வில்லனாக ஹாலிவுட், பாலிவுட் என்று நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.


இந்த நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய விஜய் சேதுபதி, நடிகர் சூரியை பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.

சூரியை எனக்கு 'வெண்ணிலா கபடி குழுவிலிருந்து தெரியும். சைதாப்பேட்டை ஸ்கூல் க்ரவுண்டில் இரவு முழுக்க அவ்வளவு நேரம் பேசியிருக்கோம். 'நான் மகான் அல்ல' படத்தில் அவன் அடுத்த கட்டத்துக்குப் போயிட்டான். 

நான் அப்பவும் ஹீரோவோட ஃப்ரண்டு தான். அதற்குப் பிறகு அவன்கிட்டே மாற்றம் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவன் அப்படியில்லை. 'வெண்ணிலா கபடி குழு' பண்ணும்போது எப்படி இருந்தானோ அப்படியே இருந்தான் என்று பெருமையாக பேசியுள்ளார்.




Advertisement

Advertisement