• Apr 23 2025

உலக அளவில் முதலிடம் பிடித்த ‘விசில் போடு’.. சில மணி நேரத்தில் இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற பாடல் நேற்று மாலை வெளியாகி இணையத்தையே ஸ்தம்பித்த நிலையில் இன்று இந்த பாடலுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியான நிலையில் ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடலுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி உள்ள நிலையில் சில மணி நேரத்தில் 7 மில்லியனை தாண்டி உள்ளதாக தெரிகிறது. 

மேலும் யூட்யூபில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் விசில் போடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்த நிலையில் அடுத்த இடத்தில் உள்ள பாடலுக்கு மூன்று மில்லியன் மட்டுமே பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் யூடியூபில் விசில் போடு பாடல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியாகும் ஒரு படத்தின் பாடல் உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றதற்கு ஒரே காரணம் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்தது தான் என்றும் இந்த பாடல் தற்போது உலக அளவில் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement