• Jul 04 2025

விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகும் ஜனநாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ்.!படக்குழு அறிவிப்பு..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். மேலும் இவர் வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன் " நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தான் இவரது கடைசி படம் என்று கூறப்படுகின்றமையால் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள் என்று கூறமுடியும் . இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என  எதிர்பார்க்கபடுகின்றது . இந்த படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல்,கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, சுருதி ஹாசன், மமிதா, பைஜூ, மோனிசா பிளசி, ரெபா மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார், தீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துளர்கள். மேலும் இப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள்ளார். இந்த திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய்யின் பிறந்த நாள் அன்று ஜூன் 22 ஆம் திகதி  ஜனநாயகன் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தகவல் அறிந்த  விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் . விஜய் நடித்த GOAT திரைப்படத்தின்  படத்தின் க்ளிம்ப்ஷும்  இதே போல் தான்  விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த  ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement