சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் போஸ்ட் வெளியிடுவதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஜிபி முத்து. இவர் தற்பொழுது ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, இவர் தற்பொழுது வெளியிட்ட வீடியோவில் உள்ளூரில் உள்ள கோவில் சத்தத்தால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் ஜிபி முத்து, “என் வீட்டு பக்கம் இருக்குற ஸ்கூலுக்கு பக்கத்துலயே கோவில் இருக்கு. அந்த கோவில்ல காலை 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா, சாயங்காலம் வர போடுறாங்க. இதனால ஸ்கூல் பசங்களோட நிலைமை என்னாகுறது? இப்போ எக்ஸாம் வேற நடக்குது. இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடுறதால பசங்க சங்கடப்படுவாங்க… சவுண்ட் குறைச்சி வச்சாத் தான் என்ன?” என்று கேட்டுள்ளார்.

ஜிபி முத்துவின் கருத்து, தற்பொழுது ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பலர் அவரின் கருத்தை பாராட்டினர்.
Listen News!