தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற அருண் விஜய், தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளார். தமிழ் திரையுலகில் உண்மையான திறமையுடனும், வலுவான கதாபாத்திரங்களோடும் விளங்கும் அருண் விஜய், இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
அவரது நடிப்பு, கதையின் மையத்திலும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிமிகுந்த தருணங்களிலும் வெளிப்படையாக ஒளிரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

‘ரெட்ட தல’ படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்து, சாம்.சி.எஸ் இசையமைப்பாளராக உள்ளார். இசை மற்றும் பாடல்கள் படத்தின் உணர்ச்சிகளை மேலும் வலுப்படுத்தி, ரசிகர்களை திரையில் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
‘ரெட்ட தல’ என்பது, அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவான படம் என கூறப்படுகிறது. கதையில் பல மிரட்டலான, அதிர்ச்சிகரமான மற்றும் உணர்ச்சிமிகு தருணங்கள் இடம்பெற்றுள்ளன. அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படம் வருகின்ற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக, தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்து. இதன் மூலம் குடும்பத்தோடு அனுபவிக்கக்கூடியதாக உள்ளது என்பதனை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ‘ரெட்ட தல’ படத்தின் முக்கிய பாடல்களில் ஒன்றான ‘கண்ணம்மா’ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். பாடலின் லிரிக்ஸ், மெலோடியும், தனுஷின் குரலும் பாடலின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
Listen News!