சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித் தளங்களில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ்–ஜாய் கிரிஸில்டா விவகாரம். கடந்த காலங்களில் வந்த புகார் மற்றும் விவாதங்கள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பின்னர், இந்த விவகாரம் மீண்டும் புதிய அதிர்ச்சிகளை தரும் நிலையில் உள்ளது. பொதுவாக, ஜாய் கிரிஸில்டாவுக்கு குழந்தை பிறந்ததால் இந்த விவகாரம் குறைந்த அளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது ஸ்டோரியில், “ராகா ரங்கராஜின் புகைப்படங்களை வெளியிடும்படி ஏகப்பட்ட மெசேஜ்கள் எனக்கு வருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் இதயத்தில் அவனுக்கு இடம் கொடுத்ததற்கும் நன்றி. விரைவில் அவனது புகைப்படங்களை வெளியிடுவேன். அவனை சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பதால், அவர் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்கள் அதற்குத் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பலர் ஜாய் கிரிஸில்டாவின் பதிவை பாராட்டி வருகிறார்கள்.
Listen News!