• Jan 19 2025

’துருவ நட்சத்திரம்’ கடனே ரூ.30 கோடி தான்.. ஆனால் ரூ.60 கோடியை ரெடி செய்துவிட்ட கவுதம் மேனன்

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த படத்தை அவர் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய கடன் சுமார் ரூ.30 கோடி என்று கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்த ஒருவர் நீதிமன்றம் சென்றதை எடுத்து பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கடனை செலுத்தினால் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடையுள்ள நிலையில் திடீரென ஒரு புத்திசாலித்தனமான யோசனை மூலமாக பணத்தை கெளதம் மேனன் ஏற்பாடு செய்து விட்டதாகவும் இதனால் விரைவில் ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முன்னணி பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்திய கௌதம் மேனன், அந்நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் இயக்கி தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் அதற்காக 20 கோடி அட்வான்ஸ் பெற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி ’துருவ நட்சத்திரம் ’திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்து தர அதே நிறுவனம் உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறைந்தது 40 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே அட்வான்ஸ் பணம் 20 கோடி மற்றும் சாட்டிலைட் உரிமை மூலம் 40 கோடி என 60 கோடி தயார் செய்து விட்டால் ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது

’துருவ நட்சத்திரம்’ படத்தின் மீது மொத்தமே 30 கோடி மட்டுமே அவர் கடன் வாங்கிய நிலையில் தற்போது அவர் 60 கோடியை ஏற்பாடு செய்து விட்டதால் விரைவில் இந்த படம் வெளியாகும் என்ற மகிழ்ச்சியில் விக்ரம் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement