• Sep 17 2024

அக்டோபர் ரேஸில் அதிரடியாக பின் வாங்கிய கங்குவா.. இதுதான் ரிலீஸ் தேதியா? வெளியான அறிவிப்பு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களாக காணப்படும் விஜய், சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதன் காரணத்தினால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்.

அந்த வகையில் இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அது போலவே சூர்யா நடிக்கும் கங்குவா  திரைப்படமும், ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் 10 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக இருந்தது.

முதலில் கங்குவா படக்குழுவினர் தமது ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில்,  இரண்டாவதாக அறிவித்த வேட்டையன் படக் குழுவினரும் அதே திகதியில் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். இதன் காரணத்தினால் சூர்யா, ரஜினிகாந்த் உடன் மோதுகின்றாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா கங்குவா  படத்தின் இயக்குனராக காணப்படும் நிலையில், அவர் தனது தலைவர் ரஜினிகாந்த் என்றும்  தனக்காக சாமி கும்பிடவில்லை என்றாலும் தான் ரஜினிகாந்துக்காக கோயிலில் ஏறி இறங்கி இருப்பதாக சொல்லியதோடு தலைவருக்கு போட்டியாக எப்போதும் நான் வரமாட்டேன் என பின்வாங்கியிருந்தார். இதன் காரணத்தினால் கங்குவா ரிலீஸ் தேதி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 அல்லது 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பான அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement