• Jan 19 2025

ஏன் ஸ்லோமோஷன்ல கத்துறாங்க..? கங்குவா பாக்க லோடு லோடாக அது வேணும்! எச்சரித்த ப்ளூ சட்டை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றைய தினம் வெளியாகி உள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா மிரட்டி இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

கங்குவா திரைப்படம் இந்தியா அளவில் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் பிற மாநிலங்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

d_i_a

கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கங்குவா படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, பாபி தியோல்  உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


இந்த நிலையில், கங்குவா படம் பற்றி பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பதிவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதாவது, கங்குவா படத்தில் கர்ணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகின்றார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் ஸ்லோ மோஷனில் கத்துறாங்க.. சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதாக வருந்துகின்றேன்.. நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும். கங்குவா என்பதுக்கு பதிலாக கத்துவா என வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா.. கத்தறதே படத்துல இருக்குறவங்க தானப்பா என பதிவிட்டு உள்ளார்.

Advertisement

Advertisement