• Jan 19 2025

என்ன கோபி சூப்பரா பத்தி எரியுதா? நேருக்கு நேரா செருப்படி கொடுத்த பாக்கியா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் பாக்கியா வீட்டிற்கு வர அங்கு பாக்கியா இல்லை. செழியனும் இனியாவும் எங்களை விட அம்மாவுக்கு ரெஸ்டாரண்ட் தான் முக்கியம். நேற்று இருந்து கால் எடுக்கவில்லை. எழில் பங்க்ஷன்க்கு கூட வரவில்லை என்று ரொம்ப மோசமாக பேசுகின்றார்கள்.

ஆனாலும் ஜெனி எழிலின் பட பூஜைக்கு வரவில்லை என்றால் அங்கு வேற ஏதோ நடந்திருக்கின்றது என்று பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றார். ஆனால் செழியனும் இனியாவும்  பாக்யாவுக்கு எதிராக பேசுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் கோபி போனையே பார்த்துக் கொண்டு பாக்யாவின் நியூஸ் எப்போ வரும் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். மேலும் அவரின் நண்பரிடம் பாக்யாவின் ரெஸ்டாரண்டை இழுத்து மூட வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு உள்ளார். இதை பார்த்து அவருடைய நண்பர் உன்னை பார்க்க பயமாகவே இருக்கின்றது என சொல்லுகின்றார்.

d_i_a

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த  கோபி மாமியாரிடம் இன்றைக்கு ஸ்பெஷலா சமைக்க சொல்லும் போது பாக்யா கதவை தட்டுகின்றார். பாக்யாவை உள்ளே வரவிடாமல் வெளியே போகுமாறு கமலா விரட்டுகின்றார். ஆனாலும் அவரை தள்ளி விட்டு பாக்கியா வருகின்றார்.


அங்கு வந்த பாக்கியா கோபி செய்த அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கின்றார். இதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகின்றார். மேலும் ஆதாரம் இருக்கா என்று கேட்க, எனது ரெஸ்டாரண்டில் உள்ள செப் தான் ஆதாரம் என்று சொல்லி கோபியின் முகத்தை உடைக்கின்றார்.

மேலும் இதை நான் சும்மா விட மாட்டேன் இதற்கான தண்டனை நீங்கள் அனுபவிக்க தான் வேண்டும். என்ன நடந்தாலும் நான் முட்டாளா இருப்பேன் என்று நினைத்தீர்களா என கோபிக்கு செருப்படி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement