• Jan 18 2025

சந்தேகத்தின் உச்சியில் மீனா... வீட்டுக்கு நாலு காலுடன் வரும் முத்து? விஜயா போட்ட ஸ்கெட்ச்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரோகிணி மற்றும் மனோஜ், பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கலாம் என பேசிக்கொண்டு இருக்க, மனோஜ் திடீரென்று பாட்டி சின்ன வயசுல நவரத்தின மாலை போட்டு இருந்தாங்க அது அப்புறம் தொலைந்து போயிட்டு. அதையே வாங்கி கொடுக்கலாம் என சொல்ல, ரோகிணியும் சூப்பர் என சொல்லுகின்றார். அதன் பின்பு மனோஜ் பாட்டிக்கு வாங்கிய புடவை எடுத்து ரிட்டன் பண்ணிடலாம். நவரத்தின மாலை வாங்கினால் புடவை எதுக்கு? காசு மிச்சமாகும்  என சொல்லுகிறார்.

இதையடுத்து விஜயாவும் அண்ணாமலையிடம் அம்மாவுக்கு என்ன கிப்ட் வாங்கி கொடுக்க போறீங்க என்று கேட்க. அதான் அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே என்று அண்ணாமலை சொல்கின்றார். அதற்கு அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க இருந்தாலும் ஏதாவது வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தணும் என்று சொல்ல, அண்ணாமலை ஆச்சரியப்பட்டு நீ அத்தை மேல எல்லாம் இப்படி அக்கரை வைக்க மாட்டியே என சொல்லுகிறார்.

அதற்கு பிறகு விஜயா பார்வதிக்கு போன் போட்டு உன் வீட்டில் இருக்கிற டிவியை பேக் பண்ணி எடுத்துட்டு வா,   அத்தைக்கு கிப்ட் கொடுத்து ஸ்பெஷல் கிஃப்ட் நான் வாங்கிக்கிறேன். அதுல உனக்கும் பங்கு தருகிறேன் என்று சொல்கிறார்.


அடுத்ததாக ஸ்ருதியும் போட்டினு வந்தா சின்ன வயசுல இருந்து நான்தான் ஜெயிப்பேன். இதுலயும் நான் தான் ஜெயிக்கணும் என்று ரவியுடன் பேசிக்கொண்டு இருக்கின்றார்.

இதை தொடர்ந்து அண்ணாமலை மீனாவிடம் முத்து பற்றி  விசாரிக்க , அந்த நேரத்தில் விஜயா அவன் எங்கேயாவது குடிக்க போயிருப்பான். வீட்டுக்கு வரும்போது நாலு காலுடன் வருவான் பாருங்க என்று நக்கலாக பேச, அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று மீனா சொல்கிறார்.

இறுதியாக சீதா சோனை கொண்டு வந்து கொடுக்க மீனா பாட்டியை வைத்து வீடியோ எடுக்கின்றார். பாட்டியும் முத்து  பற்றி விசாரிக்க, முத்துவும் போனை எடுக்காமல் இருக்க,  ஒருவேளை சோகத்தில் மீண்டும் குடிக்க போய்ட்டாரோ என சந்தேகப்பட்டு பதறுகிறார் மீனா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement