பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். இது நேற்று பொங்கல் பண்டிகை ரேசில் முதலாவதாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா இவரின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் வித்தியாசமான கதை பின்னணியையும் எளிமையையும் காட்ட கூடியதாக இருக்கும். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வணங்கான்.
ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க இருந்த திரைப்படம் சில காரணங்களினால் தடைபடவே அதனை அருண் விஜய் வைத்து எடுத்தார் பாலா. இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டினை பெற்று வருகிறது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் இன்னும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
Listen News!