• Jan 11 2025

மறைந்தார் கோதாவரி..! மீளமுடியாத வேதனையில் தமிழ்த் திரையுலகினர்..

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் அம்மா கேரக்டர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 480-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கமலா காமேஷ்.

குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

d_i_a

இவர் 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான காமேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு உமாரியாஸ் என்ற ஒரு மகள் உள்ளார். 


மேலும் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் கோதாவரி என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இது தற்போது வரையில் மீம்ஸ் கிரியேட்டராக இணையத்தில் உலா வருகின்றன. 


இந்த நிலையில், நடிகை கமலா உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார். தற்போது இவருடைய மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

இவர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் இறுதியாக வெளியான வீட்டுல விசேஷம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement