• Jan 19 2025

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மோதவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் ! வெற்றி யாருக்கு ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றாலும் ரசிகர் மனங்களை வென்று விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக வரவேற்க்கப்படும் படங்களின் எண்ணிக்கை வெளியாகும் படங்களின் எண்ணிக்கையின் மிகக் குறைந்த சதவீதத்தில் அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய ஓர் உண்மையாகும்.


இந்நிலையில் வருகிற மாதம் முதல் வாரத்திலேயே முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பது அனைத்து படங்களின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.ஆகஸ்ட் 2 ஆம் திகதி வெளியாகவிருக்கும் படங்களில் சிலதை வரிசைப்படுத்துவோமாகில் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கின்றன.


விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" ,ஜோகிபாபுவின் "போட்" , பாலசரவணனின் "பேச்சி" ,பாரி இளவழகனின் "ஜமா" , நகுலின் "வாஸ்கொடகாம" மற்றும் அனந்த் ராமின் "நண்பன் ஒருவன் வந்த பிறகு என நீளும் படங்களின் வரிசை ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.


வெளியான ஒவ்வொரு படங்களின் பாடல்கள் மற்றும் டீசர் ட்ரைலர் என அனைத்தும் படங்களின் மீதான எதிர்பார்பை அதிகரித்து வரும் நிலையில் படங்களின் வெளியீட்டு தேதி ஒன்றாக அறிவிக்கப்பட்டதையடுத்து படங்களின் வெற்றி என்பது ரசிகர்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டதான விம்பத்தை உண்டு பண்ணியுள்ளது. 


Advertisement

Advertisement