பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரித்த 'ஹரிஹர வீரமல்லு' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், இறுதியாக 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி, மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவான இந்த படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் வரவேற்பு கிடைத்துவருகிறது. பவன் கல்யாண் ரசிகர்கள் இந்த படத்தை ஒரு திருவிழாவாக மாற்றி கொண்டாடி வருகிறார்கள். மேலும் ஒரே நாளில் வெற்றி விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தயாரிப்புக் குழு தெரிவித்து உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு, ஹைதராபாத் நகரில் உள்ள பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலில் இப்படத்தின் Success Meet நடைபெறவுள்ளது.
இதுவரை படம் தொடர்பான விமர்சனங்கள் கலந்தாகக் கிடைத்தாலும், பவன் கல்யாண் ரசிகர்கள் மட்டுமே படத்தை தீவிரமாக ஆதரித்து கொண்டாடி வருகின்றனர். இதனைப்பற்றி சில நெட்டிசன்கள், "ஒரே நாளில் 1000 கோடி கிளப்ல சேர்ந்துட்டாங்களோ?" என மீம்ஸ் வைத்து கலாய்க்கும் நிலை உருவாகியுள்ளது.
Listen News!