• Jun 14 2025

பிரபல நடிகருக்கு கமல் சித்தப்பாவா.? வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் "மாஸ் ஹீரோ" என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் சிவராஜ்குமார், தற்போது தனது திரை பயணத்தின் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் பல கோடி ரசிகர்களை கவர்ந்த இவர், தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.


ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் காட்சியளித்ததன் மூலம், தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கமான முகமாக திகழ்கின்றார். இப்போது, ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 40வது ஆண்டு சாதனைக்காக இந்திய திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான கமல்ஹாசன், சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதில், "நான் சித்தப்பா மாதிரி. சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் எனக்கு காட்டின அன்பு, எதிர்பாராத வகையில் இருந்தது. சிவராஜ்குமாரின் 40 வருட சினிமா பயணம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. ஆனால் இன்று அவர் ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார். இன்னும் வளர்வார். அவருடைய இந்த சாதனை எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று கூறியுள்ளார் கமல்.

Advertisement

Advertisement