ரசிகர்களின் மனதில் வலிமையான இடத்தை பிடித்த நடிகர் அஜித் குமார், தற்போது திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் கார் ரேஸிங் துறையிலும் ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இவர் சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அஜித் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிங் போட்டியில் பங்கேற்று இருந்தார். இந்த ரேஸிங் ராக்கில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் அவரை சந்தித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வந்தன.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக துபாய் கார் ரேஸிங்கில் விபத்து ஒன்று ஏற்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்த பாதிப்பும் இன்றி தப்பினார். காரில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!