• Feb 20 2026

பிக்பாஸ் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வு.! அரோராவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் திவ்யா கணேஷ், சபரி, அரோரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த சீசனில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். சமூக ஊடக பிரபலங்கள் அதிகம் இடம்பெற்ற இந்த சீசன், வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு பரபரப்பாக மாறியது. 

விஜே பார்வதி மற்றும் கமருதீன் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் திருப்பமாக அமைந்தது.இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இறுதி சுற்றுக்கு சேனல் தரப்பில் அவர்களுக்கு இன்வைட் பண்ணியதாகவும் தகவல் வெளியானது.


இறுதிச்சுற்றில் விக்கல்ஸ் விக்ரம் நான்காவது இடமும், அரோரா மூன்றாவது இடமும், சபரி இரண்டாவது இடமும் பெற்றதாக கூறப்படுகிறது. 

வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த திவ்யா கணேஷ் டைட்டில் வெல்வது பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாகும். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement