• Jul 28 2025

என்னை பொய் சொல்ல சொன்னாங்க.! இலக்கியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களை கடந்த வாரம் முழுக்க சலசலப்பில் ஆழ்த்திய நபர் என்றால் அது இலக்கியா தான். TikTok மற்றும் Instagram மூலம் பல இளைஞர்களிடையே பிரபலம் பெற்றிருந்த இவர், திடீரென தற்கொலை முயற்சி செய்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.


இதனையடுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் என்பவரை இலக்கியா நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பின்னர் அந்த பதிவை நீக்கியதும், தொடர்ந்து பல மாறுபட்ட பதிவுகள் வந்தது. இப்போது இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

இலக்கியா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,“என்னுடைய இறப்பிற்கு காரணம் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்” என பதிவு செய்திருந்தார். இது விரைவாக வைரலாகியது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த ஸ்டோரி Delete செய்யப்பட்டது.


இதனையடுத்து, அவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொள்ளப்பட்டதால், உடல்நிலை மோசமடைந்து போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

தற்போது உடல்நலம் சற்று மேம்பட்ட நிலையில் உள்ள இலக்கியா, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில்,“என்னை மிரட்டித் தான் எல்லாமே பொய் என்று சொல்ல சொன்னாங்க. நாளைக்கு செய்தியாளர்களை சந்திக்கிறேன். என்னிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் வெளியிடுகிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்தக் வார்த்தைகள் தற்போது, திரையுலகில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement