தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள "துருவ நட்சத்திரம்" படத்திற்கு ஒரு புதிய விடிவு காலம் பிறந்துள்ளது. பல வருடங்கள் தடைகளை சந்தித்த இப்படம், இறுதியாக மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் மூலம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் கனவுப் படம் வெகு நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. அத்துடன் அதே நாளில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாவதால் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய போட்டி உருவாக இருக்கிறது.
விக்கிரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "துருவ நட்சத்திரம்" படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தொடர் தடை மற்றும் படப்பிடிப்பு பிரச்சனை எனப் பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம் இறுதியாக வெளியீட்டுக்கான உறுதியான தேதியை பெற்றுவிட்டது.
இந்த நேரத்தில், மதகத ராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் ஒரு முக்கிய முடிவுக்கு வந்துள்ளார். "பழைய படமாக இருந்தாலும் நல்ல கதையுடன் இருந்தால் அது ஓடும்" என்ற கருத்தில் உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார். இதனால் தான், துருவ நட்சத்திரத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வெளியிட முடிவு செய்துள்ளார்.
மே 1 ஆம் திகதி , தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய திருவிழா காத்திருக்கிறது என்றே கூறலாம். இதற்கு காரணம் விக்கிரமின் "துருவ நட்சத்திரம்" மற்றும் சூர்யாவின் "ரெட்ரோ" ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதவுள்ளமையே ஆகும்.
Listen News!