தமிழ் திரையுலகில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "டிராகன்" படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் தனது திரையுலகப் பயணத்தை பற்றிக் கூறியதுடன் இயக்குநர் வெற்றி மாறன் அளித்த உறுதி பற்றியும் உணர்ச்சி மிக்க வகையில் பகிர்ந்து கொண்டார்.
அஷ்வத் மாரிமுத்து தனது திரைப்பயணத்தில் வெற்றி மாறன் அளித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளார். அதில் அவர், "நான் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு வெற்றி மாறன் சாரே காரணம். அவர் இல்லையென்றால் எந்த வெற்றியையும் நான் பெற்றிருக்க முடியாது," என்று கூறினார்.
அவர் தனது தொடக்க காலத்தை பற்றி பேசும் போது, "முதல்முத்தம்" என்ற குறும்படத்தின் அனுபவத்தைப் பற்றியும் அதற்காக வெற்றி மாறன் அளித்த ஆதரவையும் நினைவுகூர்ந்தார். மாரி முத்து இயக்கிய "முதல் முத்தம்" என்ற குறும்படம், ஒரு சிறந்த கதைக்களத்துடன் வெளிவந்தாலும் அதற்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனாலும், வெற்றி மாறன், அந்தக் குறும்படத்தைக் பாராட்டியதுடன் "இந்தக் கதையை எழுதியவன் ஒரு நாளைக்கு மிகச் சிறந்த எழுத்தாளர் ஆவான் என்று உறுதியாகக் கூறினார்" என பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். தனது இயக்குநர் கனவை நிறைவேற்ற பல வருடங்கள் போராடிய மாரி முத்து, தற்போது "டிராகன்" படம் மூலம் மிகுந்த கவனம் பெற்றுள்ளார். இப்படம் அவரது நீண்ட நாள் கனவுப் படம் என்பதோடு, "முதல்முத்தம்" குறும்படத்தில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து உருவான திரைக்கதை எனவும் கூறினார்.
Listen News!