• Apr 03 2025

லலித் தயாரிப்பில் தனுஷ் நடிப்பாரா...? அட்வான்ஸ் வாங்கியும் அமைதியா இருக்க காரணம்?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் தொடர்ந்து பல வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவருடைய அடுத்த தயாரிப்பு எந்த நிறுவனத்துடன் இருக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அந்தவகையில் "லியோ" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் லலித் தனுஷை வைத்து ஒரு பெரிய படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, 14 கோடி ரூபா அட்வான்ஸ் கொடுத்தும் இன்னும் படம் தொடங்கும் நிலைக்கு வரவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.


முதலில், லலித் தனுஷை வைத்து H.வினோத் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதே நேரத்தில் விஜயின் படம் H. வினோத்திற்கு வந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால், தனுஷின் அடுத்த பட இயக்குநராக மாரி செல்வராஜைத் தேர்ந்தெடுத்தார்.


முன்னரே "கர்ணன்" படத்தில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இணைந்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலைமையில் மீண்டும் மாரி செல்வராஜுடன் தனுஷ் இணைவார் எனப் பலரும்  எதிர்பார்த்தனர். ஆனால், மாரி செல்வராஜ் கூறிய கதையை தனுஷ் விரும்பவில்லை என்பதால் அந்த படமும் கைவிடப்பட்டது.

இந்த நேரத்தில், லலித், தனுஷை வைத்து ஒரு பெரிய படத்தை உருவாக்கும் நோக்கில் அவருக்கு 14 கோடி ரூபாய் அட்வான்ஸ் வழங்கியிருந்தார். ஆனால், இதுவரை தனுஷ் லலித்தின் நிறுவனத்திற்காக திகதி ஒதுக்காது இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

Advertisement

Advertisement