• May 02 2026

இரண்டே நாளில் இத்தனை கோடியா... பாக்ஸ் ஆபீஸில் தனுஷின் 'கர' செய்த மேஜிக் என்ன?

shali / 49 minutes ago

Advertisement

Listen News!

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், சுராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே ஆரம்பத்திலேயே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


படம் வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காதபோதிலும், வசூல் தரப்பில் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் ரூ.5.85 கோடி வசூலித்துள்ள இப்படம், இந்திய அளவில் ரூ.6.20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இரண்டாவது நாளான மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் விடுமுறை என்பதால், படத்தின் வசூலில் சிறிய அளவில் உயர்வு காணப்பட்டது. அந்த நாளில் மட்டும் ரூ.6.95 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்திற்கு ஒரு நிலையான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்கள் காரணமாக, குடும்ப பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் ‘கர’ திரைப்படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


Advertisement

Advertisement