தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய ஹவுஸ்ஃபுல் ஹீரோவாக வரவேற்கப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன். 2022ல் வெளியான 'லவ் டுடே' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, அதே படத்தில் இயக்குநராகவும் செயல்பட்டு, கோலிவுட் இளைய ஹீரோக்களில் 100 கோடி வசூலித்த முதல் ஹீரோ என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அதன் பிறகு, 2025 பிப்ரவரியில் வெளியான 'டிராகன்' படமும் மெகா ஹிட் ஆகி ரூ.150 கோடி வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது, பிரதீப் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மற்றும் 'ட்யூடு' ஆகிய இரண்டு படங்களும் இந்த தீபாவளிக்கு ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’யை விக்னேஷ் சிவன் இயக்க, கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவல்கள் இணைந்து தயாரித்துள்ளன.
மற்றொரு படம் 'ட்யூடு'யை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிய இப்படத்தில், மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களுக்கு பிரதீப்பின் இரட்டை ட்ரீட் காத்திருக்கிறது!
Listen News!