• Jan 26 2026

ஹீரோவாகும் பாலா! பாலாவுக்கு கிடைத்த அதிஷ்டம்... வாழ்த்தும் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வந்தவர் பாலா இதனால் அவர்  Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.


அப்படியே நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தன்னை மக்களுக்கு சேவை செய்யும் நபராக மாற்றிக்கொண்டார்.சமீபத்தில் கூட காது கேட்காத குழந்தைகள் பலருக்கு மிஷின் வாங்கி கொடுத்துள்ளார். தான் செய்யும் உதவிகளை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் அதைப்பார்த்த பலரும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என ஒரு மேடையில் பாலா கூறியிருந்தார்.


சின்னத்திரையிலேயே பெரிய அளவில் வளர்ந்து வந்த பாலாவுக்கு இப்போது வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது அவர் ரணம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் பாலா நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement