• Jul 18 2025

நாளை காலை 10:08 மணி… என்னவா இருக்கும்.? –ராஷ்மிகா ஸ்டோரியால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பன்முகத்திறமை வாய்ந்த ராஷ்மிகா, தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பால் மீண்டும் ஒரு முறை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


அண்மையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட Story-இல், தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். அதன்போது, “நாளை காலை 10.08 மணிக்கு முக்கியமான அறிவிப்பு. காத்திருங்கள்."என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு எதைக்குறித்து என்பதை ரசிகர்கள் ஊகித்துக் கொண்டிருக்க, சமூக ஊடகங்களில் “#RashmikaNewMovie” என்ற ஹாஷ்டாக் வேகமாகப் பரவி வருகின்றது. இப்போதைக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வராத நிலையில், சினிமா வட்டாரங்களின் தகவலின்படி, ராஷ்மிகா பங்கேற்கும் புதிய படம் ஒரு பிரமாண்டமான ஆக்‌ஷன் படமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.


இப்படத்தின் ஹீரோ மற்றும் படத்தின் பெயர் குறித்து நாளைய அறிவிப்பில் வெளியாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அவர் சமீபத்தில் Animal படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அதனால், எதிர்வரும் படம் மிக உயர்ந்த தொழிநுட்பங்களுடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement