• Aug 23 2025

பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாபு திடீர் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி..!

luxshi / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் மதன்பாபு இன்று சென்னையில் காலமானார்.


இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.


மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர் 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகரான மதன்பாபு 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.


இதேவேளை தளபதி விஜயின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், மற்றும் தல அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மதன் பாப்பின் உடல், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதன்பாபுவின் திடீர் மறைவானது திரையுலகிற்கு பெரும் இழப்பு என்பதுடன் அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இதேவேளை அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement