• Jan 18 2025

RJ ஆனந்தியை வெளியேற்ற முடிவெடுத்த மக்கள்.. இந்த வாரம் சச்சனாவின் அழுகாச்சி சீன் உறுதி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தான் சூடு பிடித்துள்ளது. கடந்த சீசனைப் போலவே இம்முறையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து உள்ளார்கள்.

அதன்படி இம்முறை வைல்ட் கார்ட்  என்ட்ரியாக ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் என 6 பேர் சென்றுள்ளனர்.

வழமையாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஆறு வாரங்களை கடந்த பிறகு தான் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களை உள்ளே அனுப்புவார்கள். ஆனால் இந்த முறை ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் எந்தவித கண்டெண்டும் கொடுப்பதில்லை என்பதினால் தான் நான்கு வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளார்கள்.

d_i_a

இந்த நிலையில், இந்த வாரம் வெளியான ஓட்டு லிஸ்ட் இன் அடிப்படையில் முதல் இடத்தில் முத்துக்குமரன் காணப்படுகின்றார். மேலும் ஆர்.ஜே ஆனந்திக்கு மேலதிகமாக 200 ஓட்டுக்களை மக்கள் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இரண்டாவது இடத்தில் விஜே விஷாலும், மூன்றாவது இடத்தில் ஜாக்லினும் காணப்படுகின்றார்கள். நான்காவது இடத்தில் தீபக் காணப்படுகிறார். இவருக்கு வெறும் 13000 ஓட்டுகள் தான் கிடைத்து உள்ளதாம்.

நடிகர் ரஞ்சித் ஐந்தாவது இடத்திலும், ஆறாவது இடத்தில் அருணும், ஏழாவது இடத்தில் பவித்ராவும் காணப்படுகிறார்கள். இதில் ஆர்.ஜே ஆனந்தி பத்தாவது இடத்திலும் காணப்படுகிறார். இதை தொடர்ந்து இறுதியில் சச்சினா, சுனிதா உள்ளனர்.

எனவே இந்த வாரம் டபிள் எவிக்சன் வைத்தார்கள் என்றால் சச்சினா, சுனிதாவை தூக்கி விடுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் ஆர்.ஜே ஆனந்திக்கு மக்கள் ஓட்டுகள் வழங்கவில்லை என்றாலும் அவரை காப்பாற்றி விடுவார்கள் என  கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement