• Jan 18 2025

15 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் எவர் கிறீன் தமிழ் திரைப்படம் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி வெளியாகி தமிழ் திரையுலகில் புது பரிமாணத்தையே உருவாக்கிய படமான "நாடோடிகள்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.சமுத்திரக்கனியின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான இப் படத்தின் வெற்றியானது தமிழ் சினிமாவில் கதைக்கான முக்கியத்துவமே படத்தின் வெற்றிக்கு போதுமென நிரூபித்தது.

Sasikumar Fans Club on X: "In ...

குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்  தயாரித்த இப்படத்தில் விஜய் வசந்த் மற்றும் பரணியுடன் சசிகுமார் நடித்துள்ளனர்.கஞ்சா கருப்பு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து படத்திற்கான நகைச்சுவை தேவைக்கான நிவாரணத்தை அளித்தனர்.

Naadodigal 2 Hollywood Movie Preview ...

ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்று  நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இந்தத் திரைப்படம் வர்த்தக  ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.மேலும் இப் படத்தின் மாபெரும் வெற்றியானது 2020 இல் இதே கூட்டணி மீண்டும் இணைத்த "நாடோடிகள் 2 " படத்திற்கான அத்திவாரத்தை இட்டது எனலாம்.


Advertisement

Advertisement