• Feb 23 2025

29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. A.R ரகுமானை விவாகரத்து செய்த மனைவி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் தான் ஏ. ஆர் ரகுமான். இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. இசை புயல் ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற நாயகனாகவும் திகழ்ந்து வருகின்றார்.

தான் இசையமைத்த முதலாவது படத்திலேயே தேசிய விருதை பெற்றவர் ஏ.ஆர் ரகுமான். அதேபோல கோல்டன் குளோத் விருது, ஆஸ்கார் விருது என உலகத்தின் புகழுடைய உச்சிக்கே சென்றவர். இவரை பார்த்து விடமாட்டோமா,  ஒரு வார்த்தை பேச மாட்டோமா என்று பல ரசிகர்கள் ஏங்கி வருகின்றார்கள்.

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் கடந்த வருடம் பத்து தல படம், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன், மாரி செல்வராஜ் இயக்கத்தில்  மாமன்னன் போன்ற படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.. அதன்பின்பு இறுதியாக ஏ.ஆர் ரகுமான் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.


இந்த நிலையில், ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ரஹ்மானிடம் இருந்து  விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளார். இந்த தகவல் தமிழ் திரை உலகினருக்கு   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கையில், திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரகுமானை பிரிந்து செல்வது கடினமான முடிவு தான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நகர்த்திய பின்பு சமீப காலமாகவே எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகி உள்ளன. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement